வரிக்குறைப்பால் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரும்: மத்திய அரசு எதிர்பார்ப்பு

பெருநிறுவனங்களுக்கான வரியை 22 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்துள்ள நடவடிக்கை மூலம் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் என்று மத்திய அரசு
வரிக்குறைப்பால் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரும்: மத்திய அரசு எதிர்பார்ப்பு

பெருநிறுவனங்களுக்கான வரியை 22 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்துள்ள நடவடிக்கை மூலம் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருநிறுவனங்களுக்கான வரிக் குறைப்பை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது அமெரிக்கா உள்ளிட்ட இந்தியாவின் வர்த்தகக் கூட்டணி நாடுகள் இரு ஆண்டுகளுக்கு முன் வரிக்குறைப்பை அறிவித்ததைப் போன்ற நநடவடிக்கையாகும். புதிய தொழிலகங்களுக்கு 15 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் "பெருநிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு என்பதை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம். இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டிலும் உபரி வரி இல்லாமல் 15 சதவீத வரியை விதிப்பதில்லை. எனவே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவுக்கு வரக் கூடிய வாய்ப்பு அனுகூலமாக இருக்கிறது.

உதாரணமாக ஆப்பிள் நிறுவனமும் அதன் கிளை நிறுவனமும் (சீனாவில் இருந்து) இந்தியாவுக்கு இடம்பெயரலாம். வரிக்குறைப்பு நடவடிக்கை அவர்களைக் கவர்ந்தால் இது நடக்கும்' என்றார்.

ஆப்பிள் நிறுவனத்துக்காக செல்லிடப்பேசிகளை உருவாக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை வழங்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவையும் இந்தியாவில் தொழில் தொடங்குவது பற்றி யோசித்து வருவதாகத் தெரிகிறது.

ஆப்பிள் தவிர மேலும் பல அமெரிக்க நிறுவனங்களும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்வது பற்றி பரிசீலித்து வருகின்றன. இதற்குக் காரணம், சீன இறக்குமதிகள் மீது டிரம்ப் அரசு அதிக அளவிலான வரிகளை விதிப்பதால் அவ்விரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. எனவே, இந்தியாவில் தங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக அமெரிக்கா நிறுவனங்கள் கருதும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com