ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சிபிஐ எஸ்.பி., விருப்ப ஓய்வு

சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சிபிஐ எஸ்பி சதீஷ் தாகர் விருப்பு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சிபிஐ எஸ்பி சதீஷ் தாகர் விருப்பு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 

கடந்தாண்டு சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ விசாரித்தது. இந்த விசாரணைக் குழுவில் அங்கம் வகித்திருந்த சிபிஐ எஸ்.பி., சதீஷ் தாகர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். சொந்த காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சிபிஐ செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டார். 

முன்னதாக, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு இருவருக்கும் விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் 24-ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரி நாகேஷ்வர் ராவை மத்திய அரசு சிபிஐ இயக்குநராக (பொறுப்பு) நியமித்தது. இதன்பிறகு நாகேஷ்வர ராவ், பொருளாதாரக் குற்றப்பிரிவில் இருந்த சதீஷ் தாகரை தில்லியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்தார். சதீஷ் தாகர் தவிர, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த பல்வேறு சிபிஐ மூத்த அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com