இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு: தமிழக - கேரள முதல்வர்கள் கூட்டாகப் பேட்டி 

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். 
பழனிசாமி - பினராயி விஜயன்
பழனிசாமி - பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். 

இரு மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்துப் பேச கேரள முதல்வர் பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார்.

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

திருவனந்தபுரம் வந்த முதல்வர் பழனிசாமிக்கு கேரள அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் பினராயி விஜயன்.

இரு மாநில முதல்வர்களுக்கு இடையே நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பம்பா-அச்சன்கோயில் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பணன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டமானது, இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். 

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது, 'இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'நீர் பங்கீடு தொடர்பாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம், கேரளமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. பிரச்னை ஏற்படாத வகையில் நீரை பகிர்ந்து கொள்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளன' என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com