கவலை வேண்டாம்;  இந்திய பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில்: ராஜ்நாத் சிங் 

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதாக ராணுவத் தளபதி கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு,
கவலை வேண்டாம்;  இந்திய பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில்: ராஜ்நாத் சிங் 

சென்னை: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதாக ராணுவத் தளபதி கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புப் படைகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பாலாக்கோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியருப்பது குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் அறிக்கை குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

"இந்திய பாதுகாப்பு படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன. எனவே கவலைப்பட வேண்டாம்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாலகோட் பயங்கரவாத முகாமை பாகிஸ்தான் மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அதில் சுமார் 500 ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாகவும் ராவத் திங்களன்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முஹம்மது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவியது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானுக்குள் எல்லைப் பகுதியை தாண்டிச் சென்று பாலகோட்டில் இருந்த மிகப்பெரிய பயங்கரவாத பயிற்சி முகாமை தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com