மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் தேர்தல் குழுக் கூட்டம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 105 வேட்பாளர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 105 வேட்பாளர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 2-வது மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி, ஜோதிராதித்ய சிந்தியா, அம்பிகா சோனி, கிரிஜா வ்யாஸ், முகுல் வாஸ்னிக், ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேதிவார் தெரிவிக்கையில், "105 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக-சிவசேனா கூட்டணி தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பிறகு மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். 

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் தலா 125 இடங்களில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com