இனி எஸ்பிஐ நெட்பேங்கிங்கை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்: இதோ முழு விவரம்!

உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணம், நெட் பேங்கிக் வசதி மூலம் திருடப்படாமல் தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி எஸ்பிஐ நெட்பேங்கிங்கை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்: இதோ முழு விவரம்!


உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணம், நெட் பேங்கிக் வசதி மூலம் திருடப்படாமல் தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைன் பேங்கிக் வசதி மூலம் தற்போது பணம் திருடப்படுவது அதிகரித்திருப்பதை அடுத்து எஸ்பிஐ வங்கி புதிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் முன்னணிப் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்கள் தங்களது இன்டெர்நெட் பேங்கிங் வசதியை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி குறித்து எஸ்பிஐ வங்கி கூறியிருப்பதாவது, உங்கள் வங்கிக் கணக்கை மிகப் பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில், இனி உங்கள் வங்கிக் கணக்கின் இன்டெர்நெட் பேங்கிங் வசதியை லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம். இதற்கான வசதி எஸ்பிஐ வங்கியின் முகப்பு அல்லுத லாக்இன் செய்யும் பக்கத்திலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வசதி, ரீடெய்ல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த வசதியைப் பயன்படுத்த ஒரே ஒரு விஷயம்தான் ரொம்ப முக்கியம். அதுதான் உங்கள் புரொஃபைல் பாஸ்வேர்ட். வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் புரொஃபைல் பாஸ்வேர்ட் நிச்சயம் நினைவில் இருக்க வேண்டும்.

மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், உங்களது லாக் இன் பாஸ்வேர்டும், புரொஃபைல் பாஸ்வேர்டும் வேறுவேறு. வங்கிக் கணக்கை நிர்வகிக்க அதாவது செல்போன் எண்ணை மாற்ற, வங்கிப் பரிமாற்றத்துக்கு வங்கிக் கணக்கை சேர்க்க போன்ற விஷயங்களைச் செய்ய பயன்படுத்தப்படுவது புரொஃபைல் பாஸ்வேர்ட். 

ஒரு வேளை உங்கள் புரொஃபைல் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால், இன்டெர்நெட் பேங்கிங் விசதியை லாக் செய்வதற்கு முன்பு அதனை ரீ செட் செய்து கொள்ளுங்கள் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துளள்து.

சரி வாருங்கள்.. லாக் அல்லது அன்லாக் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
1. எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ நெட்பேங்கிங் பக்கத்துக்குச் செல்லவும்.

2. அதில் பர்சனல் பேங்கிங் லாக் இன் இடத்துக்குக் கீழே லாக் அல்லது அன்லாக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்யவும்.

3. கிளிக் செய்ததும் இந்த பக்கம் வரும்.

4. அதில் டிராப் டவுன் அம்புக் குறியை தொட்டு, அதில் லாக் அல்லது அன்லாக் வசதியை தேர்வு செய்யவும்.

5. பிறகு உங்களது யூசர் நேம், வங்கிக் கணக்கு எண், ஸ்கீரினில் தெரியும் எழுத்து ஆகியவற்றை பதிவு செய்யவும். 


6. ஒகே செய்ததும், இந்த செய்தி வரும். அதைப் படித்துவிட்டு ஒகே கொடுக்க வேண்டும்.

7. அதன் பிறகு உங்களுக்கு ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும், அதுவும் உங்கள் செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும். அதனை பதிவு செய்து உங்கள் வங்கிக் கணக்கை லாக் செய்து கொள்ளலாம்.


8. உங்கள் வங்கிக் கணக்கு லாக் ஆகிவிட்டால், அதன் பிறகு எந்த பணப்பரிமாற்றமும் அதில் நடைபெறாது.

மாதந்தோறும் தேவைப்படும் பரிமாற்றங்களை முடித்துக் கொண்டு, இந்த வகையில் உங்கள் வங்கிக் கணக்கு லாக் செய்துவிட்டால், வேறு யாரும், எந்த வகையிலும் வங்கிக் கணக்கில் மோசடி செய்ய முடியாது என்ற வகையில் எஸ்பிஐ வங்கி இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்த வேண்டும் என்றால், இதே முறையில் தான் உங்கள் வங்கிக் கணக்கை அன் லாக் செய்ய வேண்டும்.

ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், 2018 - 19ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 71,500 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறது.

இந்த எச்சரிக்கை அறிக்கையை அடிப்படையாக வைத்தே எஸ்பிஐ வங்கி தற்போது லாக் / அன் லாக் வசதயை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com