பாக். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது: காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை ஒப்படைத்து ராஜ்நாத் சிங் பேச்சு

காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலில் நீருக்குள் செலுத்தும் ஏவுகணைகளும், நீருக்குள் இருந்து நீருக்கு வெளியே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன. 
பாக். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது: காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை ஒப்படைத்து ராஜ்நாத் சிங் பேச்சு

காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் செப். 28-ஆம் தேதி இணைக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த கப்பலை கடற்படையிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
 பின்னர் அவர் பேசியதாவது:

நமது கடர்படையில் தற்போது இடம்பெற்றுள்ள புதிய இணைப்புகள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலான திறன் கொண்டது. இதன்மூலம் இந்தியா, பிரான்ஸ் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்திய தயாரிப்பு அடைப்படையில் இந்த கப்பல் கட்டுமானம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இன்றி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கடல்வழி அச்சுறுத்தல்களை நமது கப்பல் படை திறம்பட எதிர்த்து செயல்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கடல் வழி பாதுகாப்பானால் மட்டும் தான் அங்கு அதிகளவிலான வணிகம் நடைபெறும். 

எனவே இனிவரும் காலங்களில் கடல் வழியில் பயங்கரவாதத்தை பரப்ப நினைக்கும் பாகிஸ்தானின் திட்டம் நிறைவேறாது. மேலும் இந்திய பாதுகாப்புப் படைகள் பலப்படுத்தப்பட்டு வருவதால், அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.

காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலில் நீருக்குள் செலுத்தும் ஏவுகணைகளும், நீருக்குள் இருந்து நீருக்கு வெளியே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன. இதன் மூலம் எதிரிகளின் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் மீது இந்த நீர்மூழ்கிக் கப்பலால் தாக்குதல் நடத்த முடியும். 

இந்திய கடற்படையில் இடம் பெறும் இரண்டாவது ஸ்கார்பீயன் வகை நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். முன்னதாக, கடந்த 2017-ஆம் முதல் பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் கல்வாரி என்ற பெயரிலான முதல் ஸ்கார்ப்பீயன் வகை கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2005-ஆம் ஆண்டு பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் மும்பையில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு முதல் நீர்மூழ்கிக் கப்பலான கல்வாரி கடந்த 2017-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. இப்போது 2-ஆவது கப்பல் இணைக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து கப்பல்களும் கட்டி முடிக்கப்பட்டு விடும். இப்போது இத்திட்டத்தின் மதிப்பு ரூ.25,000 கோடியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com