நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல்  திட்டம் 17ஏ இன் மூலம் தயாரான முதல் கப்பலாகும
நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

மும்பை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல்  திட்டம் 17ஏ இன் மூலம் தயாரான முதல் கப்பலாகும்.

"இந்தியா ஒரு பெரிய நாடு மற்றும் பரந்த கடல் பரப்பைக் கொண்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகள் சுமார் 7500 கிலோ மீட்டர் கடலோரப் பகுதிகளைக் கொண்டது. ஒரு சிறிய இடையூறு கூட நமது நாட்டின் பெரிய அமைதியைக் சேதப்படுத்தும், இதுதான் இந்திய கடற்படைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம்" என்று சிங் கூறினார் 

அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வு திறன் கொண்ட போர் கப்பலை அறிமுகப்படுத்துவது நாட்டில் பெரும்பான்மை பாதுகாப்பு உற்பத்தியை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முதல்படியாகும் என்றும் அவர் கூறினார்.

"கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இப்போது இணைந்துள்ளது. இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதே எங்கள் இலக்கு. 2027 ஆம் ஆண்டிற்கான எங்கள் இலக்கு பாதுகாப்பு உற்பத்தியில் 70 சதவீதம் சுதேசியாக இருக்க வேண்டும்" என்றும் ராஜ்த் சிங் கூறினார்.

2650 டன் எடை கொண்ட நீலகிரி கப்பல் இன்று காலை 11:20 மணிக்கு தண்ணீருடன் முதல் தொடர்பை அடைந்த நிகழ்வு ஆரவாரத்துடன் நடைபெற்றது.

போர்க்கப்பலை நிர்மாணிப்பதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், "இந்த அதிநவீன போர்க்கப்பலை வடிவமைத்து நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பெருமை மற்றும் மனநிறைவு அளிக்கும் நாள் இன்று. நீலகிரி போர்க்கப்பல் ஒரு நாள் கடல் அலைகளில் சவாரி செய்து கடல்களை நம்பிக்கையுடன் ஆளுவார். இதுதான் இந்த வலிமையான கப்பலுக்கான எனது விருப்பமும் பார்வையும்." என்று தெரிவித்தார்.


"நீலகிரி மற்றும் திட்டத்தின் மற்ற 6 கப்பல்கள் மூலம், பெருமையுடன் இந்தியக் கொடி பெருங்கடல்களில் பறக்கும் என்று நான் நம்புகிறேன், இது நாட்டின் தகுதியான பாதுகாப்புத் தூதராக இருப்பதை நிரூபிக்கிறது, இது எங்கள் கப்பல் கட்டும் வலிமையைக் காட்டுகிறது, மேலும் இந்தியாவின் அமைதி மற்றும் வலிமை பற்றிய செய்தியை உலகம் முழுவதும் பரப்பும்  என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com