தேநீர் பைகள் மூலம் கிடைப்பது சுவையான தேநீர் மட்டுமல்ல.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

அலுவலகம், நாகரீகக் கடைகளில் மட்டுமல்ல தற்போது வீட்டில் வடிகட்ட வேண்டாம், அப்படியே குடிக்கலாம் என்ற விளம்பரத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது 'டி பேக்'ஸ்கள். 
தேநீர் பைகள்
தேநீர் பைகள்

அலுவலகம், நாகரீகக் கடைகளில் மட்டுமல்ல தற்போது வீட்டில் வடிகட்ட வேண்டாம், அப்படியே குடிக்கலாம் என்ற விளம்பரத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது 'டி பேக்'ஸ்கள். 

அந்த தேநீர் பைகளில் இருந்து உங்களுக்கு சுவையான தேநீர் மட்டும் கிடைக்கவில்லை. அதோடு, லட்சக்கணக்கான மைக்ரோ மற்றும் நானோ அளவுள்ள தேநீர் பையின் துகள்களும் தேநீரின் சுவையோடு சுவையாகக் கலந்து உங்களது வயிற்றுக்குள் சென்று சேருகிறதாம்.

தற்போது இதனால் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நமது ஜீரண மண்டலத்தை பாதிக்கும் வகையில் இதன் தாக்கம் இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியான கட்டுரை எச்சரிக்கிறது.

அளவில் மிகச் சிறிய, சிறிய மட்டுமல்ல, மிக மிகச் சிறிய துகள்கள் தேநீரில் கலந்து வயிற்றுக்குள் செல்கிறது.

கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்து இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு மனித உடலுக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யவில்லை.

இந்த ஆராய்ச்சிக்காக பல்வேறு நிறுவனங்களின் தேநீர் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தேநீர் பைகளை வாங்கி வந்து அதனை கட் செய்து, அதில் இருக்கும் டீத்தூளை வெளியே கொட்டிவிட்டு, பையை நன்கு அலசி விடுவார்கள். பிறகு அதனை தண்ணீரில் கொதிக்க விட்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு தேநீர் பைகளும் 11.6 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களையும், 3.1 பில்லியன் நானோ பிளாஸ்டிக் துகள்களையும் நீரில் கலக்கச் செய்கிறது.

இது வேறு எந்த உணவுப் பொருளையும் விட ஆயிரம் மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அடுத்தகட்டமாக இந்த பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலுக்கு எந்த அளவுக்கு தீங்கிழைக்கும் என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com