Enable Javscript for better performance
காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக ரோஹன் குப்தா நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக ரோஹன் குப்தா நியமனம்

    By DIN  |   Published on : 29th September 2019 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக ரோஹன் குப்தா நியமிக்கப்பட்டார்.
    இதற்கு முன்பு இந்தப் பொறுபை நடிகையும், கர்நாடக காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான திவ்யா ஸ்பந்தனா கவனித்து வந்தார்.
    இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் புதிய தலைவராக ரோஹன் குப்தா உடனடியாக நியமிக்கப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கட்சியின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்த அனுபவம் கொண்டவர் ரோஹன் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai