5,000 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதி: ரயில்வே சாதனை

நாட்டிலுள்ள 5,000 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது.
5,000 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதி: ரயில்வே சாதனை

நாட்டிலுள்ள 5,000 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மும்பை மத்திய ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டது. 44 மாதங்களில் நாட்டிலுள்ள 5,000 ரயில் நிலையங்களில் தற்போது இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 70 சதவீத ரயில் நிலையங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ளன.
மேற்கு வங்கத்திலுள்ள மேதினிபூர் ரயில் நிலையமானது, இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்ட 5,000 ஆவது ரயில் நிலையமாகும். அனைத்து ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதி என்ற இலக்கை, இன்னும் சில மாதங்களில் எட்டுவோம். பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இலவச வை-ஃபை வசதிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.14 கோடி பயணிகள் வை-ஃபை வசதியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com