கான்பூர் பான் மசாலா நிறுவனம் ரூ.1.5 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஒரு பான் மசாலா நிறுவனம் ரூ.1.5 கோடி வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கான்பூர் பான் மசாலா நிறுவனம் ரூ.1.5 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஒரு பான் மசாலா நிறுவனம் ரூ.1.5 கோடி வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து லக்னெள நகரில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கான்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏ.ஜே.சுகந்தி நிறுவனம், "எஸ்என்கே' என்ற பெயரில் பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, கிடங்கு, உரிமையாளரின் வீடு, முக்கிய முகவர்களுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் கடந்த வியாழக்கிழமை (செப்.26) சோதனை நடத்தப்பட்டது. 

கான்பூர், லக்னெü, ஆக்ரா ஆகிய நகரங்களில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தைச் சேர்ந்த 60 அதிகாரிகள் 11 குழுக்களாகப் பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பின்றி கான்பூர், கன்னெüஜ், பரேலி, உன்னாவ், பதேபூர் ஆகிய நகரங்களில் உள்ள முகவர்களுக்கு இந்த நிறுவனம் பொருள்களை அனுப்பி வந்தது கண்டறியப்பட்டது. மேலும், சோதனையின்போது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததை அந்த நிறுவனத்தின் இயக்குநர் அவினாஷ் மோடி ஒப்புக் கொண்டார். உடனடியாக, ரூ.1.03 கோடியை அவர் செலுத்தினார். 

சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து சில ஆவணங்களும், கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com