மொழிகள்தான் கலாசாரத்தின் உயிர்நாடி: வெங்கய்ய நாயுடு

மொழிகள்தான் கலாசாரத்தின் உயிர்நாடி என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மொழிகள்தான் கலாசாரத்தின் உயிர்நாடி: வெங்கய்ய நாயுடு

மொழிகள்தான் கலாசாரத்தின் உயிர்நாடி என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

கே.கே.பிர்லா அமைப்பு சார்பில் 28-ஆவது "சரஸ்வதி சம்மான்' விருது வழங்கும் விழா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, சரஸ்வதி சம்மான் விருதை "பக்ககி ஒத்திகிலிதே' என்ற கவிதை புத்தகத்துக்காக கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

மொழிகள்தான் கலாசாரத்தின் உயிர்நாடியாகத் திகழ்கின்றன. ஒரு மொழி அழிவைச் சந்திக்க நேரிட்டால் காலாசார அடையாளத்துக்கு அது பெரும் இழப்பாக அமையும். பாரம்பரியமும், பழக்க வழக்கங்களும் மொழியைச் சார்ந்து இருக்கிறது. ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால், அதை தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்த வேண்டும்.  வீடுகளில், ஆலோசனைக் கூட்டங்களில் தாய்மொழியைப் பயன்படுத்தி உரை நிகழ்த்த வேண்டும்.

தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பது எனது கருத்து. பள்ளிகளில் தொடக்கக் கல்வி வரை தாய்மொழியைக் கட்டாயமாக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்க வேண்டும். தாய்மொழியில் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் மதிக்க வேண்டியது தற்போது மிக மிக அவசியத் தேவையாகும் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com