இந்த திருவிழா காலம் மக்களுக்கு புதிய ஆர்வம், சக்தி, தீர்மானத்தை அளிக்கட்டும்: மனதின் குரலில் பிரதமர் உரை

வீட்டில் விளையாட்டு பொருள்கள் போல் இருக்கும் இ-சிகரெட்டுகளுடன் குழந்தைகள் விளையாடக்கூடிய ஆபத்து உள்ளது என்று பிரதமர் மோடி எச்சரித்தார்.
இந்த திருவிழா காலம் மக்களுக்கு புதிய ஆர்வம், சக்தி, தீர்மானத்தை அளிக்கட்டும்: மனதின் குரலில் பிரதமர் உரை

அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் உரையாற்றினார். பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக கலந்துரையாடினார்.

அதில் அவர் பேசியதாவது,

நவராத்திரி மற்றும் தசரா விழா இன்று துவங்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திருவிழா காலம் மக்களுக்கு புதிய ஆர்வம், புதிய சக்தி, புதிய தீர்மானம் ஆகியவற்றை அளிக்கட்டும். புனிதர் மரியம் தெரசாவுக்கு எனது அஞ்சலியையும். கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குடும்பத்தில் எந்தவொரு நபரும் புகைப் பிடிப்பவராக இருக்கக்கூடாது. ஆனால், நாகரீகம் என்று நினைத்து சில இளைஞர்கள் இ-சிகரெட்டுகளை பயன்படுத்துகின்றனர். இ-சிகரெட்டுகளை விற்பனை செய்பவரும், பயன்படுத்துபவரும் அதன் ஆபத்தை உணர வேண்டும்.

வீட்டில் விளையாட்டு பொருள்கள் போல் இருக்கும் இ-சிகரெட்டுகளுடன் குழந்தைகள் விளையாடக்கூடிய ஆபத்து உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com