திருமலை: பட்டு வஸ்திர நிலுவைத் தொகை அளிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிலுவையில் வைத்திருந்த பட்டு வஸ்திரத்துக்கான தொகை ரூ. 5.10 லட்சத்தை ஆந்திர அரசு செலுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிலுவையில் வைத்திருந்த பட்டு வஸ்திரத்துக்கான தொகை ரூ. 5.10 லட்சத்தை ஆந்திர அரசு செலுத்தியுள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாள் ஆந்திர அரசு சார்பில், பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் பட்டு வஸ்திரத்துக்கு என தனி அளவுகள் இருப்பதால், அவற்றை தேவஸ்தானம் வாங்கி வைத்துவிடும். பிரம்மோற்சவத்துக்கு வரும் ஆந்திர முதல்வரிடம் அதை அளித்து, அவர் மூலமாகப் பெற்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்து வருகிறது. பட்டு வஸ்திரத்துக்கான பணத்தை ஆந்திர அரசு செலுத்திவிடும். 

இந்நிலையில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்த பட்டு வஸ்திரத்துக்கான தொகையை ஆந்திர அரசு செலுத்தவில்லை. அவை ரூ. 5.10 லட்சத்தை எட்டியது. சனிக்கிழமை நிலுவையில் இருந்த முழுத் தொகைகையும் ஆந்திர அரசு தேவஸ்தானத்துக்கு அளித்தது. 

மேலும், 2019-ஆம் ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் திங்கள்கிழமை (செப். 30) தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு அன்று ஆந்திர அரசு சார்பில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார். அதன் மதிப்பு ரூ. 70 ஆயிரம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com