மேற்கு வங்கத்தில் பயங்கரவாத ஆட்சி: ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில்  பயங்கரவாத ஆட்சி நடைபெறுகிறது என்று பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த பாஜக தொண்டர்களுக்காக, கொல்கத்தாவில் கங்கை நதிக்கரையில் சனிக்கிழமை 'தர்ப்பணம்' செய்த அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி. நட்டா. உடன் கட்ச
மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த பாஜக தொண்டர்களுக்காக, கொல்கத்தாவில் கங்கை நதிக்கரையில் சனிக்கிழமை 'தர்ப்பணம்' செய்த அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி. நட்டா. உடன் கட்ச

மேற்கு வங்கத்தில்  பயங்கரவாத ஆட்சி நடைபெறுகிறது என்று பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அதைக் குறிப்பிட்டு நட்டா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற அரசியல் வன்முறைகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக, கொல்கத்தாவில் உள்ள கங்கை நதிக்கரையில் சனிக்கிழமை ஜெ.பி.நட்டா தர்ப்பணம் செய்தார்.

இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "கொல்கத்தாவின் பாக்பஜார் காட் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில், உயிரிழந்த 80 பாஜக தொண்டர்களுக்காக நட்டா தர்ப்பணம் செய்தார். இந்தச் சடங்கில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களும், கட்சியின் மூத்த தûலைவர்களும் பங்கேற்றனர். மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், கட்சி தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கீயா ஆகியோரும் கலந்து கொண்டனர்' என்றன.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நட்டா கூறியதாவது:

காட்டில் மிருகங்கள் உணவுக்காக, ஒன்றையொன்று கொன்று உயிர் வாழும். மேற்கு வங்கத்தில் அதுமாதிரிதான் காட்டாட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வன்முறைகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசின் கீழ், பயங்கரவாத ஆட்சி நடைபெறுகிறது. இங்கு அடியாட்கள்தான் ஆட்சி நடத்தி வருகின்றனர். சட்டப்படி  எந்தச் செயலும் நடைபெறுவதில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து விட்டது. மக்கள் இப்போது தெளிவடைந்து விட்டார்கள். மாநிலத்தில் தனது அரசியல் செல்வாக்கை முதல்வர் மம்தா பானர்ஜி வேகமாக இழந்து வருகிறார். மாநிலத்துக்கு நன்மை செய்யும் திட்டங்கள் எதுவும் அவரிடத்தில் இல்லை என்று ஜெ.பி. நட்டா கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் பதிலடி: ஜெ.பி. நட்டா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், "காட்டில் இருந்து ஜெ.பி. நட்டா வந்ததால்தான், எங்கு பார்த்தாலும் காட்டாட்சி நடைபெறுவதாக அவருக்கு தெரிகிறது. அதனால்தான், வளர்ச்சியில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் மேற்கு வங்கத்தில்கூட அவருக்கு காட்டாட்சி கண்ணில் படுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com