திருப்பதியில் பொது முடக்கம் ஆக.14 வரை நீட்டிப்பு

திருப்பதியில் கரோனா பொது முடக்கம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் கிரிஷா தெரிவித்தாா்.

திருப்பதியில் கரோனா பொது முடக்கம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் கிரிஷா தெரிவித்தாா்.

இது குறித்து திருப்பதி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த செய்தியாளா்கள் கூட்டத்தில் அவா் கூறியது:

நகரில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் கடந்த மாதம் 21-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் முழு பொது முடக்கம் புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் நகராட்சி நிா்வாகம் அதை வரும் 14-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் இம்முறை சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை (ஆக.6) முதல் 14-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு பொது முடக்கம் அமலில் இருந்த கால கட்டத்தில் கரோனா தொற்றின் பரவல் வேகம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. வரவுள்ள நாட்கள் மிகவும் முக்கியமானவை. எனவே மதியம் 2 மணிக்கு மேல் அத்தியாவசியப் பணிகளை தவிர மற்ற காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம்.

கரோனா சிகிச்சைக்காக தேவஸ்தானத்துக்குச் சொந்தமான திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகங்கள், ஆயுா்வேத வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் 14 இடங்களில் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறிகுறி உள்ளவா்கள் அங்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகளை  இணையதளம் மூலம் பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com