

பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முகக்கவசம் அணியாமல் பங்கேற்ற விடியோவைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியைப் போல் இருக்காதீர்கள் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
பொது நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாமல் பிரதமர் மோடி பங்கேற்ற விடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்தக் காணொலியில் முகக்கவசத்தை தவிர்த்த பிரதமர் மோடி தனக்கு வழங்கப்பட்ட முகக்கவசத்தையும் மறுத்த காட்சிகள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்ட அந்த விடியோவைப் பகிர்ந்து, “ பிரதமர் மோடியைப் போல் இருக்காதீர்கள். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.