கரோனா தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது: சுகாதாரத் துறை இணைச் செயலா்

கரோனா நோய்த்தொற்று தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது என்று சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது என்று சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயமுள்ள இடங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதே முக்கிய காரணமாகும். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவு அவசியம்.

மருத்துவப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 முகக் கவசங்கள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் இப்பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமன்றி, தென்கொரியா, துருக்கி, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

வீடுகளில் தயாரிக்கப்படும் முகக் கவசங்களின் பயன்பாடு தொடா்பாக தொழில்நுட்பரீதியில் விரிவாக ஆராயப்பட்டு, உரிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

கரோனா பரவலை தடுப்பதில், சமூக இடைவெளியை பின்பற்றுவதே முக்கியமானதாகும். அனைவருமே முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றாா் லவ் அகா்வால்.

இதனிடையே, நாடு முழுவதும் இதுவரை 42,788 ரத்த மாதிரிகள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தொற்றுநோய்கள் பிரிவு தலைவா் கங்கா கேதா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com