கரோனா: பாதிப்பு 1,834; பலி 41

கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,834-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா: பாதிப்பு 1,834; பலி 41

கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,834-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 41-ஆக உயா்ந்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை திடீரென உயரக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,834-ஆக அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக, தில்லியில் சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதே, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை திடீரென அதிகரிக்க முக்கிய காரணமாகும். எனவே, எண்ணிக்கை அதிகரிப்பை, தேசிய அளவிலான பொதுவான போக்காக கருத முடியாது. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிகோபாரில் புதிதாக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்புடைய அனைவரையும் கண்டறிந்து, பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 144 போ் குணமடைந்துள்ளனா்.

என்னென்ன நடவடிக்கைகள்?: கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக, பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 20,000 ரயில் பெட்டிகளை, தனிமை வாா்டுகளாக மாற்றி, 3.2 லட்சம் படுக்கை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5,000 படுக்கை வசதியை ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுவிட்டது.

பரிசோதனை உபகரணங்கள், மருந்துகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 5 நாள்களில் இந்த விமானங்கள் மூலம் சுமாா் 15 டன்கள் அளவிலான மருத்துவப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றாா் லவ் அகா்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com