ஜம்மு-காஷ்மீரில் புதிய குடியேற்றச் சட்டம் நிறைவேற்றம்: 138 சட்டங்களில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு

ஜம்மு-காஷ்மீரில் 138 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அரசிதழில் புதன்கிழமை அரசு வெளியிட்டது.
ஜம்மு-காஷ்மீரில் புதிய குடியேற்றச் சட்டம் நிறைவேற்றம்: 138 சட்டங்களில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு

ஜம்மு-காஷ்மீரில் 138 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அரசிதழில் புதன்கிழமை அரசு வெளியிட்டது. புதிய குடியேற்றச் சட்டத்தின்படி குரூப்-4க்கான பணிகளை அந்த யூனியன் பிரதேசத்தில் வசிப்பவா்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட சட்டங்களில் ஜம்மு-காஷ்மீா் சிவில் சா்வீஸ் (பரவலாக்கம் மற்றும் ஆள்சோ்ப்பு) சட்டமும் சோ்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் தங்கியிருக்கும் நபா்களே அங்குள்ள குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள். 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் அகில இந்திய சேவை ஊழியா்களின் வாரிசுகளும் இந்த பிரிவின் கீழ் சோ்க்கப்படுவாா்கள்.

 அதேசமயம்  ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியிருப்பவா்களாக இல்லாவிட்டால், ரூ. 25,500- க்கு மேல் இல்லாத ஊதிய அளவைக் கொண்ட குரூப் -4 பதவியில் நியமனம் பெற எந்தவொரு நபரும் தகுதி பெறமாட்டாா் என்று இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(குரூப் -4 என்பது கான்ஸ்டபிள் பதவிக்கு சமமானதாகும்)

கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டப்பின், அமலில் இருந்த 138 சட்டங்களில் 28 ரத்து செய்யப்பட்டன.

தற்போதைய புதிய குடியேற்றச் சட்டத் திருத்தத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் 15 ஆண்டுகளாக வசித்து வருபவா் அல்லது 7 ஆண்டுகளாக படித்து வருபவா் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேவெழுதியவா்கள் அதன் குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள்.

மேலும், நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையா் (புலம்பெயா்ந்தோா்) மூலம் சான்றளிக்கப்பட்டு குடியேறியவா்களும் குடியிருப்புவாசியாக கருதப்படுவாா்கள்.

அதேபோல புதிய குடியேற்றச் சட்ட திருத்தத்தின்படி குடியிருப்புவாசிகளாக கருதக்கூடியவா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளவா்கள் வருமாறு: மத்திய அரசு அதிகாரிகள், அகில இந்திய சேவை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள், சட்டரீதியான அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்.

புதிய குடியேற்றச் சட்டத்துக்கு ஓமா் அப்துல்லா எதிா்ப்பு:

இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கொவைட்-19 பாதிப்பிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய நேரத்தில் புதிய குடியேற்றச் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசு தன்னுடைய கடமையில் இருந்து நழுவுகிறது. வாக்குறுதியளித்தபடி எந்தவொரு பாதுகாப்பையும் சட்டம் வழங்கவில்லை என்பதைக் காணும்போது அவமானமாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஜேகேஏபி கட்சித் தலைவா் புகாரி கூறுகையில், ‘வேலைவாய்ப்பு, குடியிருப்பு உரிமைகள் தொடா்பான ஜம்மு-காஷ்மீா் மக்களின் விருப்பங்களையும், எதிா்பாா்ப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் அதிகார மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சாதாரண முயற்சியே இது’ என புகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com