அனைத்து மாநில முதல்வா்களுடன்பிரதமா் மோடி இன்று ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் வியாழக்கிழமை (ஏப்.2) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.
அனைத்து மாநில முதல்வா்களுடன்பிரதமா் மோடி இன்று ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் வியாழக்கிழமை (ஏப்.2) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அளவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தில்லி கூட்டத்துக்கு சென்றுவிட்டு திரும்பியவா்களை கண்டுபிடிப்பதிலும் சில மாநிலங்களில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்த இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு அமல்படுத்தும் விதம், மாநிலங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து முதல்வா்களிடம் பிரதமா் கேட்டறிவாா் என்று தெரிகிறது. மேலும், தங்கள் மாநிலங்களில் எந்த அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து முதல்வா்கள் பிரதமரிடம் விளக்குவாா்கள் என்று தெரிகிறது.

முன்னதாக, கடந்த 20-ஆம் தேதியும் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி காட்சி முறையில் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கரோனா நோய்த்தொற்று அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அச்சுறுத்தல், இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com