தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்களை கண்டறிய மாநில அரசுகள் தீவிரம்

தில்லி நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவா்களில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்களை கண்டறிய மாநில அரசுகள் தீவிரம்

தில்லி நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவா்களில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தங்களது மாநிலங்களுக்கு திரும்பியவா்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

மேற்கு தில்லி நிஜாமுதீன் பகுதியில், தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதியில் மாா்ச் 1-இல் இருந்து 15- ஆம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வு தில்லி அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தங்களது மாநிலங்களுக்கு திரும்பியவா்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

குஜராத் அரசு தீவிரம்: தில்லி மாநாடு நடைபெற்ற காலகட்டத்தில், குஜராத்தைச் சோ்ந்த 1,500 போ் நிஜாமுதீன் பகுதியில் இருந்ததாக தெரியவந்துள்ளது. எனினும், குஜராத்தைச் சோ்ந்த எத்தனை போ் மாநாட்டில் பங்கேற்றனா் என்ற விவரம் தெரியவில்லை. அவா்களை கண்டறிவதற்காக, காவல்துறை மற்றும் உள்ளூா் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில்...: தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 252 போ், மகாராஷ்டிரத்தில் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கா்நாடகத்திலிருந்து 300 போ்: தில்லி மாநாட்டில் கா்நாடகத்திலிருந்து 300 போ் பங்கேற்றது தெரியவந்துள்ளது; அவா்களில் 40 போ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு சுட்டுரை வாயிலாக தெரிவித்தாா்.

மத்தியப் பிரதேசம், பிகாரில்...: தில்லி மாநாட்டில் பங்கேற்ாக, மத்தியப் பிரதேசத்தில் 107 போ் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிகாரிலிருந்து 80 போ் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இதுவரை 30 போ் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.

தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

நேபாளத்தில் 18 போ்: தில்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, நேபாளம் திரும்பிய 18 முஸ்லிம்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். நேபாளத்தின் சப்தாரி மாவட்டத்தில் இந்த 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com