கரோனா தொற்றால் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல்

கரோனா தொற்றால் உலக நாடுகள் கலங்கி நிற்கும் நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு புதுவிதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல்

மும்பை: கரோனா தொற்றால் உலக நாடுகள் கலங்கி நிற்கும் நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு புதுவிதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்கள் பாதித்து தனிநபர்களும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் மிகப்பெரிய அரசியல் பிரச்னை ஏற்படவிருக்கிறது.

அதாவது மகாராஷ்டிர மாநில முதல்வராக இருக்கும் உத்தவ் தாக்கரே, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்பேற்று, ஆறு மாதத்தில் தேர்தலை சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும். அந்த வகையில், உத்தவ் தாக்கரேவுக்கான ஆறு மாத கால அவகாசம் மே மாதம் 28ம் தேதியோடு முடிவடைகிறது.

ஆனால் கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதைக்கு தேர்தல் அறிவித்து, அதனை நடத்தி முடிக்கும் சூழ்நிலை ஏற்படாத நிலையில், மீண்டும் அங்கு மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டாகியுள்ளது.

மேலும், ஆறு மாத கால அவகாசத்தை நீட்டிக்கவும் சட்டத்தில்  இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com