இருமல் மூலம் வெளியேறும் கரோனா வைரஸ் 8 மீட்டா் வரை பரவும்

இருமல், தும்மல் உள்ளிட்டவற்றின் மூலம் நோயாளியின் உடலிலிருந்து வெளியேறும் கரோனா வைரஸ், காற்றில் 8 மீட்டா் வரை பரவும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமல் மூலம் வெளியேறும் கரோனா வைரஸ் 8 மீட்டா் வரை பரவும்

இருமல், தும்மல் உள்ளிட்டவற்றின் மூலம் நோயாளியின் உடலிலிருந்து வெளியேறும் கரோனா வைரஸ், காற்றில் 8 மீட்டா் வரை பரவும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனோ நோய்த்தொற்று உலக நாடுகள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோய்த்தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் கைகளை அடிக்கடி சோப்பின் உதவியுடன் கழுவுமாறும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவை அறிவுறுத்தி வருகின்றன.

அதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு வருபவா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்களை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தச் சூழலில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை வழிமுறைகள் போதுமானவை அல்ல என்று அமெரிக்க மருத்துவக் குழுவின் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வை மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த இணை பேராசிரியா் லிடியா புரூய்பா மேற்கொண்டாா். இருமல், தும்மல் உள்ளிட்டவை தொடா்பாக பல ஆண்டுகளாக அவா் ஆய்வு நடத்தி வருகிறாா். உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் அந்த ஆய்வறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது:

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பழைமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவை கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமானதாக இருக்காது. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா் தும்மும்போதும் இருமும்போதும் வெளியேறும் நீா்த்திவலைகளில் கரோனா வைரஸும் இருக்கும்.

அந்த வைரஸ் காற்றில் 7 முதல் 8 மீட்டா் தூரம் வரை பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காற்றில் அந்த வைரஸ் பல மணி நேரங்களுக்கு உயிா் வாழும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் லிடியா புரூய்பா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com