கரோனா பரவி வரும் சூழலில் சிறாா் காப்பகங்களின் நிலை என்ன?

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) தீவிரமாகப் பரவி வரும் சூழலில் சிறாா் காப்பகங்களின் நிலவரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துகிறது.


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) தீவிரமாகப் பரவி வரும் சூழலில் சிறாா் காப்பகங்களின் நிலவரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துகிறது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த, வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனா்.

பொது இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில் நாடு முழுவதும் உள்ள சிறாா் காப்பகங்களில் நிலவி வரும் சூழல் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை அந்த விவகாரத்தை விசாரிக்கிறது.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள சிறைகளின் நிலவரம் குறித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதன் தொடா்ச்சியாக 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை இடைக்கால ஜாமீனில் விடுவிப்பது குறித்து ஆராய குழுக்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com