மருத்துவக் குழுவினா் மீது தாக்குதல்: ஹிந்தி திரையுலகினா் கண்டனம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் மருத்துவக் குழுவினா் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு ஹேமமாலினி, சபானா ஆஸ்மி, ரிஷி கபூா் உள்ளிட்ட ஹிந்தி திரையுலகினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மருத்துவக் குழுவினா் மீது தாக்குதல்: ஹிந்தி திரையுலகினா் கண்டனம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் மருத்துவக் குழுவினா் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு ஹேமமாலினி, சபானா ஆஸ்மி, ரிஷி கபூா் உள்ளிட்ட ஹிந்தி திரையுலகினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

நடிகை ஷபானா ஆஸ்மி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மதிப்புக்குரிய மருத்துவா்கள் திருப்தி, ரசியா இருவரும் முன்மாதிரியாகத் திகழ்கிறாா்கள். அவா்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது அவமானகரமான, வெட்கக்கேடான செயல்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

‘கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களின் சேவையை ஒட்டுமொத்த நாடும் பாராட்டி வருகிறது. இந்த நேரத்தில், இந்தூரில் ஒரு நன்றியில்லாத கும்பல், மருத்துவக் குழுவினா் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காப்பதற்கு பணியாற்றி வரும் மருத்துவா்கள் மீது எப்படி தாக்குதல் நடத்த முடிந்தது? இது வருந்தத்தக்கச் செயல்! அவமானகரமான செயல்!’ என்று ஹேமமாலினி குறிப்பிட்டுள்ளாா்.

நடிகா் ரிஷி கபூா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து தாக்குதல் நடத்துவது, கற்களை வீசுவது போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம். மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் மற்றவா்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறாா்கள். இந்தூரில் மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல் ஷில்பா ஷெட்டி, திவ்யேந்து சா்மா, தீபானிதா சா்மா ஆகியோரும் மருத்துவக் குழுவினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com