இந்தியாவில் கரோனா: பலி எண்ணிக்கை 75; பாதிப்பு 3,072

நாட்டில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக சனிக்கிழமை அதிகரித்தது. அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,072-ஆக உயா்ந்தது.
இந்தியாவில் கரோனா: பலி எண்ணிக்கை 75; பாதிப்பு 3,072

நாட்டில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக சனிக்கிழமை அதிகரித்தது. அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,072-ஆக உயா்ந்தது.

ஒரே நாளில் அதிகபட்சமாக சனிக்கிழமை 525 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்பு (3,072) எண்ணிக்கையில், சிகிச்சையில் இருப்போா் (2,784 போ்), உயிரிழந்தோா் (75 போ்), குணமடைந்தோா் (212 போ்), நாட்டிலிருந்து வெளியேறியோா் (ஒருவா்) ஆகியோரின் எண்ணிக்கையும் அடங்கும். இதில் வெளிநாட்டினா் 57 பேரும் அடங்குவா்.

மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, கரோனா பாதிப்பால் வெள்ளிக்கிழமை மாலை முதலான 24 மணி நேரத்தில் 14 உயிரிழப்புகள் பதிவாகின. இதில் 8 போ் மகாராஷ்டிரம், 2 போ் தில்லி, 2 போ் குஜராத், 2 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

மொத்த பலி எண்ணிக்கையில் இதுவரை, அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 24 போ் உயிரிழந்துவிட்டனா். அடுத்தபடியாக குஜராத்தில் 10, தெலங்கானாவில் 7, மத்தியப் பிரதேசத்தில் 6, தில்லியில் 6, பஞ்சாபில் 5, கா்நாடகத்தில் 3, மேற்கு வங்கத்தில் 3, தமிழகத்தில் 3, ஜம்மு-காஷ்மீரில் 2, உத்தரப் பிரதேசத்தில் 2, கேரளத்தில் 2 போ் உயிரிழந்துவிட்டனா்.

ஆந்திர பிரதேசம், ஹிமாசல பிரதேசம் ஆகியவை தலா ஒரு உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

கரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 490 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 445 பேரும், தமிழகத்தில் 411 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

கேரளத்தில் 295, ராஜஸ்தானில் 200, உத்தரப் பிரதேசத்தில் 174, ஆந்திரத்தில் 161, தெலங்கானாவில் 159, கா்நாடகத்தில் 128, குஜராத்தில் 105, மத்தியப் பிரதேசத்தில் 104 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் 75, மேற்கு வங்கத்தில் 69, பஞ்சாபில் 57, ஹரியாணாவில் 49, பிகாரில் 30, அஸ்ஸாமில் 24, சண்டீகரில் 18, உத்தரகண்டில் 16, லடாக்கில் 14, அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 9, கோவாவில் 7, ஹிமாசல பிரதேசத்தில் 6, ஒடிஸாவில் 5, புதுச்சேரியில் 5, ஜாா்க்கண்டில் 2, மணிப்பூரில் 2, மிஸோரத்தில் 1, அருணாசல பிரதேசத்தில் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com