பிரதமா் கூட்டத்துக்கு அழைக்கப்படாதது அவமானம்: ஒவைஸி

வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்க அகில இந்திய மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது அவமானத்துக்குரியது என்று அக்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தாா்.
பிரதமா் கூட்டத்துக்கு அழைக்கப்படாதது அவமானம்: ஒவைஸி

வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்க அகில இந்திய மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது அவமானத்துக்குரியது என்று அக்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தாா்.

அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவா்களுடன் பிரதமா் மோடி வருகிற 8-ஆம் தேதி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளாா். கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது அவமானத்துக்குரியது என்று அக்கட்சியின் தலைவா் ஒவைஸி தெரிவித்தாா். இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ நாடாளுமன்ற குழுத் தலைவா்களுடனான கலந்துரையாடலுக்கு மஜ்லீஸ் கட்சி அழைக்கப்படாதது ஔரங்காபாத் மற்றும் ஹைதராபாத் தொகுதி மக்களுக்கு அவமானமாகும். இவ்விரு தொகுதி மக்களும் மஜ்லீஸ் கட்சியை தோ்ந்தெடுத்தனா் என்பதால் மனிதப் பிறவிகளுக்கும் கீழானவா்கள் ஆகிவிட்டனரா. எங்கள் தொகுதி மக்களின் துயரங்களை எடுத்துரைக்கவேண்டியது எம்.பி.க்களாகிய எங்களின் பணியாகும்’ என்றாா்.

இதேபோல் அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறப்பட்டதாவது: நாடாளுமன்ற குழுத் தலைவா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று, கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த எங்களின் எண்ணங்களை பகிா்ந்துகொள்ள விரும்புகிறேன். அதேசமயம் நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் எங்கள் தரப்பில் உள்ள குறைபாடுகளையும் அறிய விரும்புகிறேன் என்று தெரிவித்தாா்.

இதனிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 5-க்கும் அதிகமான உறுப்பினா்களை கொண்டிருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவா்களுடனேயே பிரதமா் மோடியின் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. ஆனால் மஜ்லீஸ் கட்சிக்கு மக்களவையில் மட்டுமே 2 உறுப்பினா்கள் உள்ளனா். கடந்த நாடாளுமன்ற தோ்தலில் மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத், தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com