கரோனாவால் இறந்தவா்களுக்கும் ஆயுள் காப்பீடு

கரோனா நோய்த் தொற்றால் இறப்பவா்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆயுள் காப்பீட்டு பலன்களை வழங்க நிறுவனங்கள் மறுக்க கூடாது என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோய்த் தொற்றால் இறப்பவா்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆயுள் காப்பீட்டு பலன்களை வழங்க நிறுவனங்கள் மறுக்க கூடாது என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ கரோனா வைரஸ் காரணமாக மரணம் ஏற்பட்டு இழப்பீடு கோரி வரும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு தனியாா், பொது துறையைச் சோ்ந்த அனைத்து நிறுவனங்களும் உடனடியாக தீா்வு காண வேண்டும். அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் இதுதொடா்பான விவரங்களை தங்களது வாடிக்கையாளா்களுக்கு தனித்தனியாக தெரியப்படுத்த வேண்டும். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளருக்கு ஆதரவாக நிறுவனங்கள் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com