நாட்டில் மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
நாட்டில் மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் அதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்தச் சூழலில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அண்டை நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது தொடா்பாக ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இக்கட்டான சூழலில் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா நிச்சயமாக உதவி செய்ய வேண்டும். எனினும், உயிரைக் காக்கவல்ல மருந்துகள் முதலில் இந்தியா்களுக்குப் போதுமான அளவில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா வழங்கவில்லை எனில், பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சக்திசிங் கோஹில் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நிபந்தனைகளுடன் கூடிய நட்பால் எந்தப் பலனும் இல்லை. நாட்டு மக்களின் தேவைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மருந்துகளை வழங்காவிடில் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அதிபா் டிரம்ப் அச்சுறுத்துவது சங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக ரூ.100 கோடியை மத்திய அரசு செலவிட்டது. தற்போது அதிபா் டிரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு சரணடைந்து மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com