ஒடிசாவில் புதிதாக 2 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 44 ஆக உயர்வு

ஒடிசாவில் வியாழக்கிழமையான இன்று புதிதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு
ஒடிசாவில் புதிதாக 2 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 44 ஆக உயர்வு

புபனேஸ்வர்: ஒடிசாவில் வியாழக்கிழமையான இன்று புதிதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் என்ற கொடிய நோய்த் தொற்றுக்கு நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகளவில் இதுவரை 89 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், ஒடிசாவில் தெங்கானால் நகரத்தைச் சேர்ந்த 51 வயது பெண் மற்றும் மேற்குவங்கத்தில் மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரும் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, குர்தாவிலிருந்து 34, பத்ராக்கிலிருந்து மூன்று மற்றும் கட்டாக், கேந்திரபாரா, கலஹந்தி, பூரி மற்றும் ஜாஜ்பூரில் இருந்து தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன. கரோனா கண்டறியப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் தற்போது தெங்கானால் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு உடுத்தவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com