நாட்டில் போதுமான அளவுக்கு உரம் கிடைக்க அரசு நடவடிக்கை: மத்திய அமைச்சர் சதானந்த கௌடா

வரும் கரீப் பருவத்தில், போதுமான அளவுக்கு உரங்களை விநியோகிக்க தமது ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக
நாட்டில் போதுமான அளவுக்கு உரம் கிடைக்க அரசு நடவடிக்கை: மத்திய அமைச்சர் சதானந்த கௌடா

வரும் கரீப் பருவத்தில், போதுமான அளவுக்கு உரங்களை விநியோகிக்க தமது ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கௌடா தெரிவித்துள்ளார். தற்போதைக்கு உரங்கள் கையிருப்பு நிலைமை நன்றாக இருப்பதாக கவுடா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், போதுமான அளவுக்கு உரங்களை விநியோகிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். உர உற்பத்தி, அதனைக் கொண்டு செல்லுதல், போதிய அளவு கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை உரத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், மாநில அரசுகள் மற்றும் ரயில்வே அமைச்சகத்துடன் அமைச்சகம் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநில நிலைமை குறித்து தனியே டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், ‘’ கர்நாடகத்தைப் பொறுத்தவரை, மாநிலத்தில் விதைகள், உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகளின் தட்டுப்பாடு இல்லை. இது தொடர்பாக, கர்நாடக மாநில அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இன்றைய நிலவரப்படி, மாதாந்திரத் தேவையான 2.57 லட்சம் டன்னுக்கு பதிலாக, மாநிலத்தில் 7.3 லட்சம் டன் இருப்பு உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com