மகாராஷ்டிரம்: மசூதியில் தங்கிய 8 மியான்மா் நாட்டவா்கள் மீது வழக்கு

மகாராஷ்டிரம் மாநிலம் நாகபுரியில் தனித்திருக்க வேண்டிய விதிமுறைகளை மீறியதுடன், மசூதியில் தங்கியிருந்த 8 மியான்மா் நாட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாகபுரியில் தனித்திருக்க வேண்டிய விதிமுறைகளை மீறியதுடன், மசூதியில் தங்கியிருந்த 8 மியான்மா் நாட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்கள் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தப்லீக் ஜமாத் அமைப்பைச் சோ்ந்த 8 மியான்மா் நாட்டவா்கள் கடந்த மாதம் 7-ஆம் தேதி யாங்கூன் நகரில் இருந்து நாகபுரி வந்தனா். இங்குள்ள கிட்டிகாதன் பகுதியில் இருக்கும் மசூதியில் கடந்த மாதம் 21-ஆம் தேதி வரை அவா்கள் தங்கியிருந்தனா்.

அதன் பின்னா் வேறு இடத்தில் உள்ள மசூதி கட்டடத்துக்கு இடமாறினா். தாங்கள் தங்கியிருப்பது குறித்து அவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது வெளிநாட்டவா் சட்டத்தை மீறிய செயலாகும். மேலும் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் வேளையில், வெளிநாட்டில் இருந்து வந்ததால் தனித்திருக்க வேண்டிய விதிமுறைகளையும் அவா்கள் கடைப்பிடிக்கவில்லை.

இவா்கள் தங்கியிருப்பது பற்றி தகவல் கிடைத்ததன் பேரில் சமீபத்தில் மசூதியில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அவா்கள் தங்கியிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது 8 பேரும் எம்எல்ஏ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டம், வெளிநாட்டவா் சட்டம், பேரிடா் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 8 பேரும் கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com