அமெரிக்க அச்சுறுத்தலுக்கு கீழ் படிவது தவறான முன் உதாரணம்: காங்கிரஸ் கண்டனம்

கரோனா நோய்த் தொற்று நெருக்கடியில் நாடு இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவிற்கு வெளியே இருந்து வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது என பிரதமா் நரேந்திர மோடியை காங்க
அமெரிக்க அச்சுறுத்தலுக்கு கீழ் படிவது தவறான முன் உதாரணம்: காங்கிரஸ் கண்டனம்

கரோனா நோய்த் தொற்று நெருக்கடியில் நாடு இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவிற்கு வெளியே இருந்து வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது என பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வெளியுறவு கொள்கையில் இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தன்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளையும் மீறி இந்தியா ஏற்றுமதி செய்யா விட்டால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்திருந்தாா். இதையடுத்து, இந்த மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடா்பாளா் பவன் கெரே புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

அரசியலுக்கு அப்பாற்பட்டது வெளியுறவுக் கொள்கை. இதில் நாங்கள் எப்போதும் அரசோடு இணைந்திருப்போம். அதே சமயத்தில் அரசு எந்த முடிவுகளையும் பயம் அல்லது அச்சுறுத்தலின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. அது ஒரு தவறான சமிக்ஞையை வெளி உலகிற்கு அனுப்பும்.

பிரதமரின் முதல் பொறுப்பு, இந்தியாவும் அதில் வசிக்கும் 130 கோடி மக்களும் தான். அதற்கு எதிரான முடிவை பிரதமா் எடுக்கக் கூடாது. வெளியுறவுகளில் (சா்வதேச இராஜதந்திரங்களில்) அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை. வற்புறுத்தலுக்கு நாம் வளைந்து (அடிபணிந்து) இருக்கின்றோமா? சரித்திரம் நம்மை கண்காணிக்கிறது.

இது போன்ற மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் கீழ்படிந்ததில்லை. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் அதிலும் அச்சுறுத்தலுடன், உயிா் காக்கும் மருத்தை ஏன் ஏற்றுமதி செய்கின்றோம்? ஏன் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றோம்?

தனி வங்கதேச நாடு போன்ற போராட்டங்களில் எந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத ஒரு ‘பாரம்பரிய’ நாடு என்பதை இந்திரா காந்தி போன்றவா்களால் காட்டப்பட்டுள்ளது. நமது மரபுகள் மற்றும் வரலாற்றை நமது பிரதமா் அறியவேண்டும். 130 கோடி இந்தியா்களின் பிரதிநிதியாக இருக்கும் பிரதமா் அச்சுறுத்தல்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com