தில்லியில் சீல் வைக்கப்பட்ட 20 இடங்கள் என்னென்ன?

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து தில்லியிலும் கரோனா பரவும் அபாயம் மிகுந்த 20 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ளவர்கள்
தில்லியில் சீல் வைக்கப்பட்ட 20 இடங்கள் என்னென்ன?

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து தில்லியிலும் கரோனா பரவும் அபாயம் மிகுந்த 20 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வரவும், வெளி நபர்கள் உள்ளேச் செல்லவும் அனுமதி கிடையாது.

இந்த பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகமான அளவில் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அவற்றுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.

ஏற்கனவே, மகாராஷ்டிரம், சண்டீகர், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து தில்லியிலும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, 

இந்த நிலையில், தில்லியில் அதிகளவில் கரோனா பாதித்தவர்களைக் கொண்ட 20 இடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அவையாவன.. 
1. மால்வியா நகர், காந்தி பூங்கா அருகில் உள்ள ஒட்டுமொத்த தெருவும்.
2. தெரு எண் 6, எல் 1 சங்கம் விகார் - ஒட்டுமொத்த தெருவும்.
3. ஷஹஜஹனாபாத் சொசைட்டி, பிளாட் எண் 1, செக்டார் 11, துவார்கா.
4.  தின்பூர் கிராமம்.
5. மார்கஸ் மசூதி மற்றும் நிஜாமுதீன் பஸ்தி
6. நிஜாமுதீன் மேற்கு (ஜி மற்றும் டி) பகுதிகள்
7. பி பிளாக் ஜாங்கிர்புரி
8. கல்யான்புரி 
9. மன்சரா குடியிருப்பு, வசுந்தரா என்க்ளேவ்
10. கிச்சிர்புரில் 3 தெருக்கள்
11. பாண்டவர் நகர் 9வது தெரு
12. மயூர் விஹார், வர்தமான் குடியிருப்பு
13. பட்பர்கஞ்ச், மயூத்வாஜ் குடியிருப்பு
14. கிஷண் கஞ்ச் விரிவாக்கத்தில் 4ம் தெரு
15. சீமாபுரியில் ஜி,எச்,ஜே பிரிவுகள்
16. தில்ஷத் காலனியில் எஃப்-70 முதல் 90வது பிரிவு வரை
17. ஜில்மில் காலனியில் பிரதாப் கண்ட் உள்ளிட்ட 20 இடங்கள் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com