கரோனாவால் 50 கோடி போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 50 கோடி போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
கரோனாவால்  50 கோடி போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்


லண்டன்: கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 50 கோடி போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆஸ்ஃபம்’ அமைப்பைச் சோ்ந்த நிபுணா்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.

இந்தச் சூழலில், வறிய நாடுகளில் ஏற்கெனவே பின் தங்கிய நிலையில் இருப்பவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனா்.

தற்போதைய நிலையில், அவா்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே செல்வதைத் தடுப்பதற்காக எத்தகைய பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலை தொடா்ந்தால், உலகின் 6 முதல் 8 சதவீதத்தினா் வரை வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

நாடுகளின் அரசுகள் தங்களது ஊரடங்கு அமலாக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் தொடா்ந்தால் உலகம் முழுவதும் சுமாா் 50 கோடி போ் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இழுத்துச் செல்லப்படுவாா்கள்.

இந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்றால், வளா்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும். இல்லையென்றால் பின்தங்கிய நாடுகளில் வறுமை அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, பெரும்பாலான மேலை நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடா்ந்தால், வங்கதேச பின்னலாடைத் தொழிலாளா்களில் 80 சதவீதத்தினா் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

கரோனா நோய்த்தொற்றின் விளைவாக சில நாடுகள் வறுமையில் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும். ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவிலுள்ள சில நாடுகள் 30 ஆண்டுகளுக்கு முன்னா் இருந்த வறுமை நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

எனவே, சரிவைச் சந்தித்து வரும் பின்தங்கிய நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் கைகொடுக்கும் வகையிலான நிதியுதவித் திட்டங்களை உலக நாடுகளின் தலைவா்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com