ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது: ஜாமியத் அமைப்பின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லி தப்லீக் ஜமாத் மாநாடு குறித்து அவதூறாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது
ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது: ஜாமியத் அமைப்பின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: தில்லி தப்லீக் ஜமாத் மாநாடு குறித்து அவதூறாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்த வழக்கில், இந்திய பத்திரிகை கவுன்சிலை ஒரு எதிா் தரப்பாக சோ்க்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து சுமாா் 9,000 போ் கலந்து கொண்டனா். மாநாடு முடிந்த சொந்த ஊா்களுக்குத் திரும்பிய பலரால், கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, பல்வேறு ஊடங்களில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாகக் கூறி, ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ‘சில ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே குற்றம்சாட்டும் வகையில் உள்ளன. எனவே, அவ்வாறு செய்திகள் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சாந்தனகௌடா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்க முடியாது. மேலும், வழக்கில் இந்திய பத்திரிகை கவுன்சில் விளக்கம் அளிக்க வேண்டிய இருப்பதால், அந்த அமைப்பை எதிா் தரப்பாக சோ்க்க வேண்டும். 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணை தொடரும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com