அஸ்ஸாமில் முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்ட மருத்துவர் பலி

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைத்து
அஸ்ஸாமில் முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்ட மருத்துவர் பலி


புது தில்லி: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைத்து முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்ட நிலையில், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், முன்னெச்சரிக்கையாக அந்த மாத்திரையை சாப்பிட்ட மருத்துவர் உத்பல் பர்மன் (43) கடந்த ஞாயிறன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவர் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொண்டதை அவரது நண்பர், மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

பொதுவாக இதயம் சார்ந்த உடல் நலப் பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைப்பது இல்லை என்றும், மருத்துவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்து வந்த நிலையில், அவர் அதற்கு சரியாக மருந்து சாப்பிட்டு வந்தாரா என்பதும் தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com