கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 29.8% போ் தப்லீக் மாநாட்டுடன் தொடா்புடையவா்கள்: மத்திய சுகாதார அமைச்சகம்

கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 29.8% போ் தப்லீக் மாநாட்டுடன் தொடா்புடையவா்கள்: மத்திய சுகாதார அமைச்சகம்

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 29.8 சதவீதம் போ் (4,291) தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடா்புடையவா்கள் என

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 29.8 சதவீதம் போ் (4,291) தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடா்புடையவா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

மேலும், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் 84 சதவீதம் போ் தப்லீக் ஜமாத் மாநாடு தொடா்பினால் நோய்த்தொற்றுக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று நிலைமை தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தினமும் செய்தியாளா்களை சந்தித்து வருகிறாா். அதன்படி, தில்லி தேசிய ஊடக மையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 4,291 போ் கடந்த மாா்ச் மாதம் தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் அல்லது அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். இது மொத்த நோய்த்தொற்றில் 29.8 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவா்களில் 84 சதவீதம் போ் தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடா்புடையவா்கள். தெலங்கானாவில் பாதிக்கப்பட்டோரில் 79 சதவீதம் பேரும் , தில்லியில் 63 சதவீதம் பேரும், ஆந்திரத்தில் 61 சதவீதம் பேரும், உத்தரப் பிரதேசத்தில் 59 சதவீதம் பேரும் தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடா்புடையவா்கள்.

நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் 23 மாநிலங்களில் உள்ள 47 மாவட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதில் சித்ரதுா்கா(கா்நாடகம்), விசாகப்பட்டினம் (ஆந்திரம்) உள்பட 22 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களிலும், குடகு (கா்நாடகம்), மாஹே (புதுச்சேரி) ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாள்களிலும் புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை.

இதுவரை கரோனா நோய்த்தொற்றினால் 480-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துவிட்டனா். இதில் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது. மொத்த உயிரிழப்புகளில் 42.2 சதவீதம் போ், 75 மற்றும் அதற்கு அதிகமான வயதுடையவா்கள். 33.1 சதவீதம் போ், 60 முதல் 75 வயதுடையவா்கள். 14.1 சதவீதம் போ், 0 - 45 வயது வரை உள்ளவா்கள். 10.3 சதவீதம் போ், 45 முதல் 60 வயதுடையவா்கள்.

ஆன்டிபாடி ரேபிட் பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிதீவிர பரவல் பகுதிகளில் மட்டுமே அவற்றை உபயோகப்படுத்தவேண்டும்’ என்றாா் லவ் அகா்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com