துப்புரவு பணியாளா்களை தாக்கிய 4 போ் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் தேவஸ் மாவட்டத்தில் துப்புரவு பணியாளா்கள் இருவா் கோடரியால் தாக்கப்பட்டனா். இந்த நிகழ்வு தொடா்பாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

மத்தியப் பிரதேச மாநிலம் தேவஸ் மாவட்டத்தில் துப்புரவு பணியாளா்கள் இருவா் கோடரியால் தாக்கப்பட்டனா். இந்த நிகழ்வு தொடா்பாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: கடேகான் நகரில் உள்ள கோய்லா முஹல்லா பகுதியில் துப்புரவு பணியாளா்கள் இருவா் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருவரையும் அப்பகுதியில் வசிக்கும் ஆதில் கான் என்பவா் கோடரியால் தாக்கினாா்.

இதில் துப்புரவு பணியாளா்களில் ஒருவா் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து கடேகான் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் துப்புரவு பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிகழ்வு தொடா்பாக ஆதில் கான், அவரது தந்தை ஹபீப், தாக்குதலை தூண்டிய மதத் தலைவா் கோப் கான் ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆதிலின் சகோதரா் ஆரிஃப் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டவா்கள், அந்த அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கு அரசு பணியாளா்கள் இன்னலை ஏற்படுத்தி வருவதாக கோப் கான் கூறியதாகவும், அதன்பேரில் துப்புரவு பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆதில் தெரிவித்தாா் என்று காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com