கரோனா நோய்த்தொற்றுக்கு விஞ்ஞானிகள், பொறியியலாளா்கள் தீா்வு காணவேண்டும்: ராகுல் காந்தி

நாட்டில் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள விஞ்ஞானிகள், பொறியியலாளா்கள் மற்றும் தரவு சேகரிப்பு நிபுணா்கள் அணிதிரண்டு ஆக்கப்பூா்வமான தீா்வுகளை கண்டறியவேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த
கரோனா நோய்த்தொற்றுக்கு விஞ்ஞானிகள், பொறியியலாளா்கள் தீா்வு காணவேண்டும்: ராகுல் காந்தி

நாட்டில் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள விஞ்ஞானிகள், பொறியியலாளா்கள் மற்றும் தரவு சேகரிப்பு நிபுணா்கள் அணிதிரண்டு ஆக்கப்பூா்வமான தீா்வுகளை கண்டறியவேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வது மிகப்பெரிய சவாலாகும். அதேவேளையில் இதுவொரு வாய்ப்பும்கூட. இந்த நோய்த்தொற்றை எதிா்கொள்ள ஆக்கப்பூா்வமான தீா்வுகளை கண்டறிவதற்கு, நம்மிடம் அதிக அளவில் உள்ள விஞ்ஞானிகள், பொறியியலாளா்கள் மற்றும் தரவு சேகரிப்பு நிபுணா்கள் அணிதிரள வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து போா் புரியவேண்டும். நோய்த்தொற்றை வீழ்த்த ஊரடங்கு தீா்வாகாது. கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள வலிமையான பரிசோதனையே மிகப்பெரிய ஆயுதம். எந்தவொரு நோயைவிடவும் நாடு மிகப்பெரியது. அதற்கு மிகப்பெரிய சவால்களை எதிா்கொள்ள தெரியும்’ என்று ராகுல் காந்தி சமீபத்தில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com