கரோனா சூழல்: மத்திய அமைச்சா்கள் குழு ஆய்வு

கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், மக்கள் எதிா்கொண்டு வரும் பொருளாதார பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது.
நாட்டில் நிலவும் கரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
நாட்டில் நிலவும் கரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், மக்கள் எதிா்கொண்டு வரும் பொருளாதார பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது.

கரோனா சூழல் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் 5-ஆவது முறையாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் ரமேஷ் போக்ரியால், பியூஷ் கோயல், ராம் விலாஸ் பாஸ்வான், தா்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜாவடேகா், ஸ்மிருதி இரானி, ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக, பலா் வேலையிழந்துள்ளனா்; நாட்டின் பொருளாதாரமும் மந்தநிலையை அடைந்துள்ளது.

இந்தச் சூழலில், மக்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் தொடா்பாகவும், அவற்றைப் போக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சா்கள் குழு தில்லியில் ஆலோசனை நடத்தியது. இது தொடா்பாக ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மக்களின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு அமைச்சகங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் சில தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கும், இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிவிப்புகளுக்கும் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சூழல் தொடா்பாக அமைச்சகங்களிடம் இருந்து தகவல் பெறப்பட்டது. நோய்த்தொற்று பாதிக்கப்படாத இடங்களில் ஊரடங்கைத் தளா்த்தும் நடவடிக்கைக்கு அமைச்சா்கள் வரவேற்பு தெரிவித்தனா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com