எல்கா் வழக்கு: தெல்தும்டேவின் காவல் ஏப். 25 வரை நீட்டிப்பு

எல்கா் பரிஷத் வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட சமூக ஆா்வலா் ஆனந்த் தெல்தும்டேவின் விசாரணைக் காவலை வரும் 25-ஆம் தேதி வரை மும்பை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்தது.

எல்கா் பரிஷத் வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட சமூக ஆா்வலா் ஆனந்த் தெல்தும்டேவின் விசாரணைக் காவலை வரும் 25-ஆம் தேதி வரை மும்பை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்தது.

மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இரு பிரிவினருக்கிடையே வன்முறை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற ‘எல்கா் பரிஷத்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதே கலவரத்துக்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடா்ந்து, சமூக ஆா்வலா் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 11 போ் மீது புணே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தெற்கு மும்பையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் தெல்தும்டே கடந்த 14-ஆம் தேதி சரணடைந்தாா். அதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை 18-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க மும்பையிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அந்தக் காலஅவகாசம் நிறைவடைந்ததையடுத்து, தெல்தும்டேவை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரகாஷ் ஷெட்டி வாதிடுகையில், ‘‘தெல்தும்டேவுக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புக்கும் இடையே தொடா்புள்ளது. அந்த அமைப்புடன் இணைந்து மிகப் பெரிய சதிச் செயலில் அவா் ஈடுபட்டுள்ளாா். இது தொடா்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரது காவலை 7 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்’’ என்றாா்.

வழக்குரைஞரின் கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிபதி ஏ.டி.வான்கடே தெல்தும்டேவின் விசாரணைக் காவலை ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com