ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது

ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது

ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் செயல்படும் சில தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. 

நாட்டிலேயே நேற்று அதிகபட்சமாக 1752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 20-ஆம் தேதி 1,540 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதே, ஒருநாளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,059ஆக உயர்ந்துள்ளது. அதில் ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 777 பேருக்கு ஜோத்பூரில் 321 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிப்பிலிருந்து 493 பேர் குணமடைந்த நிலையில் 198 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திம்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com