
பரஸ்பர நிதியங்கள் மீதான பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடி கடனுதவியை அறிவித்துள்ளது.
பிரபல நிறுவனமான ஃபிராங்க்ளின் டெம்பிள்டன், கடந்த மார்ச் இறுதியில், 50% வரை வீழ்ச்சி கண்டது. தொடர் சரிவை அடுத்து, இந்நிறுவனம் தனது 6 கடன் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்தது.
இதையடுத்து, பொருளாதார வல்லுநர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ரிசர்வ் வங்கி பரஸ்பர நிதி(மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து பங்குச்சந்தை சற்று ஏற்றம் கண்டன. பரஸ்பர நிதி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இந்த நிதி பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.