மீரட்: கங்கை நதியில் ஆற்று டால்ஃபின்கள் தென்பட்டன

கரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக மும்பையில் லட்சக்கணக்கான பூநாரை பறவைகள் குவிந்ததைப் போல, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கங்கை நதியில் ஆற்று டால்ஃபின்கள் தென்பட்டன.
மீரட்: கங்கை நதியில் ஆற்று டால்ஃபின்கள் தென்பட்டன

லக்னௌ: கரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக மும்பையில் லட்சக்கணக்கான பூநாரை பறவைகள் குவிந்ததைப் போல, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கங்கை நதியில் ஆற்று டால்ஃபின்கள் தென்பட்டன.

இந்த ஊரடங்கு நடவடிக்கையின் போது, பூமி தன்னைத்தானே மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் பணியை செவ்வனே செய்து வருகிறது. இந்த பூமி தங்களுக்கானது மட்டும் என்று நினைத்திருந்த மனிதர்கள்  இன்று வீடுகளுக்குள் அடங்கியதால், மற்ற அனைத்து ஜீவராசிகளும் தங்களுக்கும் சொந்தமான பூமியில் மகிழ்ச்சியோடு உலாவி வருகின்றன.

இந்த நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பாயும் கங்கை நதியில், ஆற்று டால்ஃபின்கள் செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த விடியோ, ஐஎஃப்எஸ் அதிகாரி ஆகாஷ் தீப் பத்வானின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அதில், இரண்டு டால்ஃபில்கள் கங்கை நதியில் நீந்தி மகிழ்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com