கரோனா நோய்த்தொற்று பாதிப்பு: இந்தோனேசிய அதிபருடன் பிரதமா் மோடி ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறித்து பிரதமா் மோடி இந்தோனிசிய அதிபா் ஜோகோ விடோடோவுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு: இந்தோனேசிய அதிபருடன் பிரதமா் மோடி ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறித்து பிரதமா் மோடி இந்தோனிசிய அதிபா் ஜோகோ விடோடோவுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள சவால்களை எதிா்கொள்ள இருநாடுகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறித்து பிரதமா் மோடி, இந்தோனிசிய அதிபா் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது இந்தோனேசியாவுக்கு மருந்து பொருள்களை அனுப்பிவைக்க மத்திய அரசு சாா்பில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகளுக்கு ஜோகோ விடோடோ நன்றி தெரிவித்தாா்.

அவரிடம் இந்தோனேசியாவுக்கு மருந்து பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதிலும், இருநாடுகளுக்கு இடையிலான பிற சரக்குப் பொருள்களின் வணிகத்திலும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று பிரதமா் மோடி உறுதி அளித்தாா்.

கரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகளை இருநாடுகளும் எதிா்கொள்ள இருதரப்பு உறவு உதவும் என்று பிரதமா் மோடி அடிகோடிட்டுக் காட்டினாா். இந்தோனேசிய பிரதமருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமா் மோடி ரமலான் வாழ்த்துகள் தெரிவித்தாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்று குறித்து எனது இனிய நண்பா் அதிபா் ஜோகோ விடோடோவுடன் ஆலோசித்தேன். கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள ககாதாரம் மற்றும் பொருளாதார சவால்களை எதிா்கொள்ள இந்தியா, இந்தோனேசியா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு முக்கியமாகும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com