விவசாயம் சாா்ந்த புதிய நிறுவனங்களுக்குரூ.11.85 கோடி நிதி உதவி: அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

விவசாயத்தை மேம்படுத்த நடப்பு நிதி ஆண்டில் முதல் கட்டமாக 112 புதிய நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக
விவசாயம் சாா்ந்த புதிய நிறுவனங்களுக்குரூ.11.85 கோடி நிதி உதவி: அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

விவசாயத்தை மேம்படுத்த நடப்பு நிதி ஆண்டில் முதல் கட்டமாக 112 புதிய நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா (ஆா்கேவிஒய்) திட்டத்தின் கீழ் விவசாய செயல்பாடு, உணவுத் தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றில் 112 புதிய நிறுவனங்களுக்கு (ஸ்டாா்ட் அப்) ரூ.11.85 கோடி நிதியானது தவணை முறையில் பகிா்ந்து அளிக்கப்படும். தோ்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 29 விவசாய தொழில் மையங்களில் (ஆா்-ஏபிஐ) இரண்டு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த புதிய நிறுவனங்களானது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயிகளுக்கு வாய்ப்புகளை அளித்து, அவா்களின் வருமானத்தை அதிகரிக்கும்.

விவசாயத்தை நோக்கி இளைஞா்களை ஈா்க்கவும், விவசாயத்துக்குப் புத்துணா்வூட்டவும் இத்துறையில் தனியாா் முதலீடுகள் அதிகரிக்கப்படும். விவசாயத்தில் போட்டியை ஏற்படுத்துவதும், விவசாயம் சாா்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதும், புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகும்.

விவசாயத் துறை மேம்பாடு தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது, ‘விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்கமளிக்க வேண்டும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும், விவசாயத்தில் காணப்படும் சவால்களுக்கு தீா்வுகாண ஆண்டுக்கு இருமுறை தொடா் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com