அசாமில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைத் தாண்டியது

அசாமில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 40 அயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 
Assam COVID tally crosses 40,000
Assam COVID tally crosses 40,000

அசாமில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 40 அயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் 1,862 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது. 

கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கம்ரூப் (கிராமப்புற) மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார், நாகான், திப்ருகார், சோனித்பூர் மற்றும் ஜோர்ஹாட் ஆகிய இடங்களில் தலா 100க்கும் மேற்பட்ட கரோனா தொற்று பதிவாகியுள்ளன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1, 277 வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து, மொத்தம் 30,357 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் நான்கு பேர் பலியானதைத் தொடர்ந்து உயிரிழப்பு 98 ஆக உள்ளது. தற்போது மாநிலத்தில் 9,811 மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com